ஹூலந்தாவ புதிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள் மக்கள் பாவனைக்காக நேற்று (18) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கையளிக்கப்பட்டது.
ஏழு பர்சஸ் காணியில் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இரு அறைகள், ஹோல், சமையலறை மற்றும் குளியலறையுன் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளே மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
மலைநாட்டு புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மலைநாட்டு புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜாப்பிள்ளை ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.