யுத்தத்தினால் உயிழந்த மற்றும் காணாமல் போன மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
ரணவிரு சேவை அதிகாரசபையின் ஏற்பாட்டில் மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 110 மாணவர்களுக்கு இப்புலமைபரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி, மத்திய மாகாண ஆளுநர் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.