மஹா கணபதி ஹோமத்துடன், 10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளைக்கொண்டு, நடாத்தப்படுகின்ற ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று(17) காலை ஆரம்பமானது.
இந்தியாவின் கொல்லிமலை சித்தர் மஹா பைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளால் நிகழ்த்தப்பட்ட வேள்வியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நாளை(18) வெள்ளிக்கிழமையும் குறித்த வேள்வி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.