களுகங்கை அண்மித்த பகுதியில் நடைபெறும் அனைத்து நிர்மாண பணிகளையும் உடனடியாக நிறுத்த களுத்துறை மாவட்ட சூழல் குழு தீர்மானித்துள்ளது என்று மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
அபபிரதேசத்தில் உள்ள காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
களு கங்கை சார் வனப் பகுதியை அளவிடவும் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் விரைவில் நிறுத்தவும் நில அளவைத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் பாதுகாக்கப்படும் வனப் பிரதேச எல்லைகளையும் பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, சில கட்டுமாணப் பணிகளினால் ஆற்றின் அளவு குறைந்துள்ளதாக வடிகாலமைப்புத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் கடும் மழை காலத்தில் நீர் வடிந்து செல்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.