மகாவெலி மற்றும் கொத்மலை வலய விவசாயிகளுக்கு காணி உறுதி வழங்கும் தேசிய நிகழ்வு நாளை (18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திகன மத்திய மாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
மகாவலி வலய வாழ் விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இக்காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட காணி உறுதி வழங்கும் திட்டத்தில் 85 வீதம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இவ்வருடம் முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.