நாட்டில் உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாகவும் அல்லது சில உயர் நீதிமன்றங்களை ட்ரயல் எட் பார் ஆக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (16) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றபோது கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்நடவடிக்கை மேற்கொள்ள அரசியலமைப்பில் மாற்றம் தேவையில்லை என்று தெரிவித்த அமைச்சர், உயர் நீதிமன்றங்களை ட்ரயல் அட் பார் மாற்றியமைத்தால் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.