தேசிய மீனவ கூட்டமைப்பு மற்றும் அதன் மூலம் கிராமப்புற மீனவ அமைப்புக்கள் வலுப்படுத்துவதன் அவசியம் காணப்படுவதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ஒரு முன்னுரிமை கடற்றொழில் ஸ்டேட் அமைச்சர் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் தேசிய மீனவ கூட்டமைப்பின் அங்கத்துவ மீனவர்களுடைய கருத்துக்களையும் பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ள அமைச்சர், இது நிமித்தம் விரைவில் 53 கிராமப்புற மீன்பிடி அமைப்புக்களை சென்று நேரடியாக சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிராமபுற மீனவ அமைப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி வழங்கவேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்த அவர் அதனூடாக மீனவர்களை வலுப்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
புதிய அங்கத்துவர்கள் இணைத்தல் மற்றும் புதிய நிர்வாகக்குழுவை நியமிப்பதன் மூலம் கிராம புற மீனவ அமைப்புக்களை செயற்றிறன் மிக்கதாக மாற்ற முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், மீனவர்களுக்கு 100,000 ரூபா வீட்டு மானியமும் 30,000 ரூபா மலசலகூட நிர்மாணிப்புக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ரேகாவ பிரதேசத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நண்டு பண்ணை இம்மாதம் 26ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் பண்ணை வேலைகள் இன்னும் ஐந்து மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என்றும் நண்டுகளுக்கு மவுசு காணப்படுகின்றமையினால் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.