அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி மத்திய நிலையமொன்று கேகாலை தெஹிஓவிட்ட அளுகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சபரகமுவ மாகாணசபையினூடாக நிர்மாணிக்கப்பட்ட இம்மத்திய நிலையமானது ஒரே தடவையில் 200 பேருக்கு பயிற்சி வழங்கும் வசதிகளை கொண்டுள்ளது. 225 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணித்துள்ள இம்மத்திய நிலையத்தினுல் பயிற்சி மத்திய நிலையம், தங்குமிட வசதி, உணவகம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. அரசாங்க ஊழியர்களுடன் மட்டும் மட்டுப்படுத்தாமல் நாட்டின் ஏனைய தனியார் துறை ஊழியர்களுக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு பணம் செலுத்தி வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.
இமத்திய நிலைய திறப்பு விழாவின் போது, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாணசபை உறுப்பினர் அஜித் சாமிந்த, மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய, மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குருப்பு ஆராச்சி மற்றும் உதவி பணிப்பாளர் (திட்டமிடல்) ருவன் பிரேமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.