வாழைச்சேனை தொடக்கம் ஓட்டமாவடி வரையான 54 கிலோ மீற்றர் தூரத்திற்கு உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சிக்கமைய இந்த குடிநீர்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல ஆயிரம் ரூபா நிதிச்செலவில் முன்னெடுக்கப்படும் இக்குடிநீர்த்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏராவூருக்கு விஜயத்தின் மேற்கொண்டபோது போது கிரான் தொடக்கம் ஓட்டமாவடி வாழைச்சேனை வரையான குடிநீர்த்திட்டமொன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti