பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்கும் உத்தேசத் திட்டத்திற்கான முன்மொழிவு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் செப்டெம்பரில் அமுல்படுத்தப்படும் என்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தினூடாக 4.5 மில்லியன் மாணவர்கள் நன்மையடைவர் என்றும் அரச பாடசாலைகள் மாத்திரமன்றி தனியார், சர்வதேச பாடசாலைகள், பிரிவெனாக்கள், ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களும் இக்காப்புறுதி திட்டத்தினுல் உள்வாங்கப்படுவர்.
ஏனைய நாடுகளில் வசதி குறைந்த மாணவர்களுக்கே இக்காப்புறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இலங்கையில் அவ்வாறின்றி அனைத்து மாணவர்களுக்கும் காப்புறுதி நன்மைகளை பெறுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கமைய ஒரு மாணவனுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.