இலங்கையின் மீன்பிடித்துறையினூடாக எதிர்கால இலக்கை அடையக்கூடிய பல்முனை செயற்பாடுகளைக் கொண்டு மீன்பிடித் துறைமுகங்கள் நிர்மாணிப்பதன் அவசியம் காணப்படுவதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்திற்கு பொருந்தும் வகையிலான மீன்பிடித் துறைமுகமொன்றை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் சலை, மாதகல். நெடுந்தீவு மற்றும் உடப்பு ஆகிய பிரதேசங்களில் உத்தேச மீன்பிடித்துறைமுகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
உத்தேச மீன்பிடித்துறைமுகங்கள் நான்கை நிர்மாணிப்பதற்கான அடிப்படை ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கு கொரிய மீன்பிடித்துறை அமைச்சின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இப்பல்நோக்கு துறைமுகங்கள் சுற்றுலாத்துறை, மீன்பிடி மற்றும் வர்த்தகத்தை வெற்றிகொள்வதை இலக்காக கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க செயலாளர் அப்துல் மஜித் உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.