இலங்கையின் எதிர்கால தொழிலாளர் வளத்தின் அவசியம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நேற்று (11) கொள்கை அபிவிருத்தி காரியாலயத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி காரியாயலத்தில் உள்ளக பயிற்சியை பெற்ற ஹாவார்ட் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவர் ஒருவரினால் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பொருளாதார அபிவிருத்திக்கு இலங்கையில் பொருளாதார விரிவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயினும் கூட அதற்கான பயிற்சி பெற்ற தொழிலாளர் வளத்தில் நிலவும் தட்டுப்பாடு அதற்கு தடையாக உள்ளது. கொள்கை அபிவிருத்தி காரியாலயத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடாக எதிர்காலத்தில் பலம் மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர் வளத்தை கட்டியெழுப்பவதன் அவசியமேற்பட வேண்டும் என்று கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்க வேண்டிய பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கொள்கையை கொள்கை அபிவிருத்தி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.facebook.com/policydevelopmentoffice சென்று பார்வையிடலாம்.