நாட்டின் பல பாகங்களில் அடையாளங் காணப்பட்டுள்ள சிறுநீரக நோய்க்கு ஆயுள்வேத வைத்திய முறையினூடாக சிகிச்சை வழங்குவதற்கான மத்திய நிலையங்களை அமைக்க சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றமையினால் அது குறித்து ஆராய்வதற்கான வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மெதவச்சி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மருத்துவமனையை அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன திறந்து வைத்தார்.
அம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு தற்போது 2487 நோயாளர்கள் பதிவு செய்துள்ளதுடன் மாதாந்தம் சுமார் 600 இற்கும் அதிகமான நோயாளர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்.
வட மத்திய மாகாணத்தில் இவ்வாறான 8 மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் கலென் பிந்துனு வெவ மற்றும் தலாவ ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களை அண்மையில் சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்.