'உதா கம்மான' திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 36வது வீடமைப்புத் திட்டம் இன்று (10) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் பெரியகுளம் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் கிராமம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 25 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களும் கையளிக்கப்பவுள்ளன.
ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கிராமத்தில் நிர்மாணிப்புப் பணிகள் கடந்த 2005ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 25 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை குறைந்த வட்டியிலான வீடமைப்புக் கடனை வழங்கியுள்ளது. ஒரு வீட்டுக்கு 20 பர்ச்சஸ் காணி வழங்கப்பட்டுள்ளதுடன் தூய்மையான குடிநீர். மின்சாரம் மற்றும் வீதி வசதிகள் என அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன.
இதனை முன்னிட்டு விசிரி வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் 425 குடும்பங்களுக்கு குறைந்த வட்டியுடனான வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் ஷில்ப்ப சவிய திட்டத்தின் கீழ் 118 பேருக்கு நிதியுதவி வழங்கல் மற்றும் நடமாடும் சேவை என்பனவும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.