2016 12ம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வடமேல் மாகாண அரச உத்தியோகத்தர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வு இன்று (10) குருணாகலை ப்ளூஸ்கை ஹோட்டலில் நடைபெறுகிறது.
நிதி மற்றும் ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்படுகிறது.
இதேவேளை, தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வொன்றினையும் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.