தற்போதைய அரசாங்கம் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியையும் பின்தங்கிய பிரதேச வறிய மக்களுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரலங்வில ஶ்ரீ ஜேதவனாராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அனைத்து மக்களினதும் பொருளாதார நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கான பொறிமுறையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. மேலதிகமாக கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் சுகாதாரம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளை இன்னும் மூன்று வருடங்களில் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்போது பூஜாபூமி உறுதிப்பத்திரத்தையும் ஜனாதிபதி விகாராதிபதி சங்கைக்குரிய மின்னேரிய சுபலங்கார தேரவிடம் கையளித்தார்.