அனைத்து அரச நிறுவனங்களினதும் கூரைகளையும் சூரிய மின்உற்பத்தி நிலையமாக பயன்படுத்துவதற்கு இவ்வருடத்திற்கான பாதீடு மற்றும் அமைச்சரவை என்பவற்றின் அனுமதி கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தற்போது சூரிய மின்சக்தி பயன்பாடானது தற்போது வெகுவாக பயன்படுத்தும் திட்டம் என்பதுடன் சுமார் பத்து இலட்சம் வீடுகளின் கூரைகளை சூரிய மின்னுற்பத்தி நிலையமாக பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்ட்டு வருகிறது.
ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் கல்வி மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனினும் இன்றைய கல்விக்கும் நாட்டின் தேவைக்கும் இடையில் பாரிய இடைவௌி காணப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம். தற்போது அதே எண்ணிக்கையான பட்டதாரிகள் வேலைவாய்ப்பை நாடி காத்திருக்கின்றனர். தொழில் கேள்விக்கும் கல்விக்கும் இடையிலான இடைவௌியை இது காட்டுகிறது.
இதற்கான சரியான தீர்வு பிள்ளைகளுக்கு தொழிற்கல்வியை வழங்குவதே ஆகும். ஆனால் இது இலகுவான விடயம் அல்ல. அரச கொள்கையை மாற்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். பிரபல பாடசாலைகளினூடாக தொழில்நுட்ப அறிவை பெற பிள்ளைகள் அதிகமாக நாடுவதை தவிர்ப்பதற்கு பிரபலமற்ற பாடசாலைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி வசதியை வழங்க வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.