மத்திய மாகாண அதிவேக பாதை நிர்மாணிப்புப் பணிகள் இன்னும் மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யுமாறு என்று உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்குள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய மாகாண அதிவேக பாதையின் முதற்கட்டமான கடவத்த தொடக்கம் மீரிகம மற்றும் இரண்டாம் கட்டமான மீரிகம தொடக்கம் குருணாகலை வரையான நிர்மாணிப்புப் பணிகளை நேரில் பார்வையிடச் சென்ற அமைச்சர், இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, மீரிகம கணேகொட மற்றும் மீரிகம மதுருபிட்டிய பிரதேசங்களையும் பார்வையிட்டார். பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளமையினால் பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் டி.சீ திசாநாயக்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி, பணிப்பாளர் நாயகம் ரோஹித்த ஸ்வர்ண ஆகியோர் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.