கண்டி பொது வைத்தியசாலை வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டு வரும் 12 மாடிகளைக் கொண்ட புதிய புற்றுநோய் வைத்தியசாலை பணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த வைத்தியசாலை நிர்மாணிப்புப் பணிகளை பார்வையிட நேரில் சென்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
புதிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு அவசியமான வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர், நிர்மாணிப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் தெரிவித்தார்.
380 கட்டில்களைக் கொண்ட இவ்வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலத்தில் தொற்றாத நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனால் அதற்குத் தயாராகும் நோக்கில் இம்மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.