கடந்த நான்காம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரிசிக்கான ஆகக்கூடிய சில்லறை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 90 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட் சம்பா அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 80 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 75 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உள்நாட்டு வௌ்ளையரிசி ஒரு கிலோவின் விலை 78 ரூபாவாகவும் இறக்குதி செய்யப்பட்ட வௌ்ளையரிசி ஒரு கிலோவின் விலை 65 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.