ஆசிரியர்கள் ஆரோக்கியமான மனநிலையுடன் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கத்தினாலான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்திர கல்லூரியின் புதிய கட்டிடத் தொகுதியை மாணவர் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் இன்று (04) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு ஆசிரியர்களும் அதிபர்களும் மேற்கொள்ளும் முயற்சியானது சம்பளத்தினால் அளவிட முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து கலை பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை பெற்ற மாணவர்கள் மூவருக்கு பரிசில்களை வழங்கிய ஜனாதிபதியிடம் அதிபர் டி. ரணசிங்க நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து அநுராதபுரம் நிவன்தகசேரிய வித்தியாலய மாணவர்களின் பாவனைக்காக 28 இருக்கைகளை கொண்ட வாகனமொன்றையும் ஜனாதிபதி வழங்கினார். ஜனாதிபதியின் வாகன கோரிக்கையை முன்வைத்த 12ம் ஆண்டு மாணவர் எ.டி.டி சத்சரணி மாணவியிடமே வாகனத்தை ஜனாதிபதி கையளித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, வட மத்திய மாகாண ஆளுநர் பி.பி. திஸாநாயக்க, முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.