தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மீன்பிடித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வரட்சியான காலநிலையினால் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நன்னீர் மீன் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நீர்நிலைகளில் நீர் வற்றியமையினால் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரட்சியான பிரதேசங்களில் உள்ள பாரிய நீர் நிலைகளில் மட்டுமே மீன் வளம் பாதுகாக்கப்படுகிறது.
சிறிய நீர்நிலைகள் முற்றாக வற்றிப்போயுள்ளன. அந்நீர் நிலைகளில் உள்ள மீன் குஞ்சுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களை சதுர முறையல் மீன் வளர்ப்பை மேற்கொள்ள கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முறையை பின்பற்ற முன்வரும் மீனவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.