இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிம் அட்டை வடிவில் இக்கடவுச்சீட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்விவகாரம், வட மேல் மாகாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.