மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசியப்பாடசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை (02.08.2017)காலை நடைபெற்ற சிங்கிதி, குருளைச்சாரணர் சின்னஞ்சூட்டும் விழாவில் 68 மாணவிகள் சாரணியத்தில் இணைந்து கொண்டனர். சிங்கிதி சாரணர்களாக 32பேரும், குருளைச்சாரணர்களாக 36 பேருக்கும் சின்னங்கள் சூட்டப்பட்டன.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் நடைபெற்ற இச் சின்னஞ்சூட்டு விழாவில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் ஈ.பி.ஆரனந்தராசா, விசேட விருந்தினராக ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) இணைத்திட்ட அதிகாரி திருமதி சர்மிளா சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், மாவட்ட உதவிச் சாரண ஆணையாளர்களான ஏ.குணரெட்ணம், ஐ.ஜே.கிறிஸ்ரி ஆகியோரும், மாவட்ட சாரண சின்னஞ்சூட்டலுக்குப் பொறுப்பான ஐ.ஜே.சில்வெஸ்ரர் ஆகியோரும், பாடசாலைகளின் சாரண ஆசிரியர்களும் பங்கு கொண்டனர்.
LDA_dmu_batti