மாத்தறை மற்றும இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகிறதென தேசிய கட்டிய ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரியின் குருவிட்ட பிரதேச செயலகத்தின் எரந்த உள்ளிட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட பிரதேச செயலக பிரிவிலும் இவ்வாறு மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
நூறு மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யுமாக இருந்தால், மண்சரிவு, நில இறங்கல், பாறைகள் சரிந்தல், மண் மேடுகள் சரிதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்று மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவ்வாற நிலைமை இருக்குமாயின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.