நாங்கள் டெங்கு பற்றி அறிந்து கொள்வோம் ஒழிப்பதில் பங்களிப்போம் இது எங்கள் கடமையும் பொறுப்புமாகும் எனும் தொனிப்பபொருளில் டெங்கு பெருக்கத்தைக் கட்டுப்படுத்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (01) செவ்வாய்கிழமை செங்கலடி நகரில் நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி அலுவலம் மற்றும் செங்கலடி மெதடிஸ் பாலர் பாடசாலை இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாலர்பாடசாலை மாணவர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலை முன்றலில் ஆரம்பமான வழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி முச்சந்திவரை சென்று மணீடு பாலர் பாடசாலையை வந்தடைந்தது.
டேங்குவை ஒழிப்போம் உரிமைப் பாதுகாப்போம், குப்பை சூழங்களை அகற்றி டெங்கு நுளம்புகளை இல்லாதொழிப்போம், உயிரைக் கொல்லும் உயிர்கொல்லியை அழிப்போம், டெங்கு நுளம்பு பெருக இடமளிக்க வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு வழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
டெங்கு நோயின் போது உட்கொள்ளக் கூடிய உணவு மற்றும் பராமரிப்பு, டெங்கு நுளம்பு கட்டுப்படுத்தல், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்தல், டெங்கு நோயின் அறிகுறிகள், டெங்கு பரவும் இடங்களை அழித்தல் போன்ற உள்ளடக்கங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் விளியோகிக்கப்பட்டன.
LDA_dmu_batti