காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் இடங்களில் பரம்பரையாக வசித்தும் காணி உறுதி பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் முதற்கட்டம் அண்மையில் எல்பிட்டிய, வெலிவிட்ட திவிதுர மற்றும் கரன்தெனிய பிரதேச செயலகப்பிரிவுகளில் நடைபெற்றது.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, பரம்பரை பரம்பரையாக நிலவிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார். அதற்கு பொது மக்களும் விரும்பம் தெரிவித்தனர்.
அதற்கமைய காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம் எதிர்வரும் 6ம் திகதி இரத்தினபுரி மாவட்டத்திலும் தொடர்ந்து நாடு பூராவும் உள்ளடக்கப்படும் வகையிலும் நடத்தப்படும். இதனூடாக இதுவரை தீர்க்கப்படாதிருந்த காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.