அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒப்பந்தம் நாளை (29) கைச்சாத்திடப்படவுள்ளது.
சீன நிறுவனமான சைனா மர்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மத்திய வங்கியில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குறித்த ஒப்பந்தம் இன்று (28) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் எனினும் விவாதத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கலந்துகொள்ளாது கோஷங்களை எழுப்பி குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லாத காரணத்தினால் ஒன்றிணைந்த எதிர்கட்சி விவாதத்தில் கலந்துகொள்ளாதிருந்தனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.