கொரிய நிதியுதவியுடன் வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
கடதாசி ஆலை புனரமைப்பு நடவடிக்கைக்கு 600 மில்லியன் ரூபா நிதியுதவியை கொரியா வழங்கியுள்ளதாகவும் இதனூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் தொழில்வாய்ப்பினை பெறுவர் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம் டக் ஜோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti