நாடு தழுவிய பாடசாலைகள் ரீதியில் இன்று (28) ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகயில் முப்படையினர் இணைந்துக்கொண்டுள்ளனர்.
நாளைமறுநாள் (30) வரையில் மேற்கொள்ளப்படும் இச்சிரமதான நடவடிக்கையினூடாக நாட்டின் அனைத்து பாடசாலைகளில் உள்ள டெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவாக உள்ள இடங்களை அடையாளங்கண்டு அழிப்பதே நோக்கமாகும்.
முப்படையினருடன் பாடசாலை மாணவர்கள். ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். பிரதேச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இந்நடவடிக்கைகு ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.
வழமைப் போன்று இன்று பாடாலை நடைபெறவுள்ளதுடன் பாட நடவடிக்கைகளுக்கு பதிலாக சிரமதான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாணவர்கள் பாடசாலை சீருடைக்குப் பதிலாக சிரமதான பணிகளை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய ஆடைகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.