சார்க் சுகாதார அமைச்சர்களின் ஆறாவது மாநாடு நாளை (29) கல்கிஸ்ஸ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், சார்க் வலய நாடுகள்
எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. குறிப்பாக தொற்றாத நோய்கள், போஷாக்கு, சுகாதாரம், தொற்று நோய்கள், காசநோய், எச்ஐவி
உ்பட பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் உள்ளக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு பிரகடனமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1985ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'தெற்காசிய வலய ஒத்துழைப்பு அமைப்பில், (SAARC) ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.