நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளங்கண்டு, அழிப்பதற்கு மக்கள் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமன்றி, சுகாதார பிரிவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான புகையடித்தல் தொடர்பிலும் தௌிவுடன் செயற்படவேண்டும் என்றும் அச்செயலணி தெரிவித்துள்ளது.
புகையடிக்கும் நடவடிக்கையின் போது மக்கள் தத்தமது வீடுகளின் கதவு, ஜன்னல்களை முழுமையாக திறந்து புகையை வீட்டுக்குள் செல்வதற்கு வழியமைக்கவேண்டும் என்றும் இது தொடர்பில் சரியான தௌிவின்மை காரணமாக சிலர் வீடுகளின் கதவு ஜன்னல்களை மூடி வைக்கின்றனர் என்றும் அச்செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இவ்விடயத்தை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு அனைத்து பொதுமக்களிடமும் டெங்கு ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது.