நெல் கொள்வனவு சபையிடம் உள்ள நெல்லை உடனடியாக கொள்வனவு செய்து அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்குமாறு கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர ரிஷாத் பதியுதீன் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு (CWE) ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வாழ்க்கைச் செலவு குழுக்கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்.
சந்தையில் தேசிய அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு இவ்வாலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, நெல் கொள்வனவு சபைக்கு சொந்தமான 55,000 மெற்றிக் தொன் நெல்லை உடனடியாக அரிசியாக்கி சந்தைக்கு வழங்குமாறு தெரிவித்துள்ள அமைச்சர் இதற்கு மேலதிகமாக 50,000 மெற்றிக்தொன் அரிசியை மியன்மார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.