திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் விஜயம் செய்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்க மூன்றாண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 10,000 ஹெக்டேயர் காணி அடையாளங்கண்டு வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் குறித்த காணி எதிர்கால அபிவிருத்திக்கும் தற்போது நான்கு டேர்மினல்களின் வர்த்தக பயன்பாட்டிற்கேற்ப அபிவிருத்தி செய்யவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவும் இதன்போது உடனிருந்தார்.