கழிவுகள் பிரிகை செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு சூழல் மீள்சுழற்சி முறையை பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும் என்று களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட ஆய்வு மையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஜீ. குலரத்ன தெரிவித்துள்ளார்.
பேண்தகு கழிவு முகாமைத்துவத்தினூடாக சேதன பசளை முறையை அறிமுகப்படுத்தி 2020ம் ஆண்டளவில் தூய்மையான நாட்டுக்கான ஆய்வு நடத்தப்படுகிறது என்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி எம். ஜீ குலரத்ன தெரிவித்தார்.
தற்போது உள்ள முறையினூடாக சேதன பசளை தயாரிப்பதற்கு 80 - 90 நாட்கள் தேவைப்படுகின்றன. இந்நவீன உயர் தொழில்நுட்ப முறையினூடாக ஒரே நாளில் சேதன பசளை தயாரிக்க முடியும் என்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட ஆய்வு மையத்தினால் நடத்தப்பட்ட சமூக விஞ்ஞானிகளின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் இப்புதிய தொழில்நுட்ப முறையானது இலங்கை கழிவு முகாமைத்துவத்திற்கு பொருத்தமானது என்று முன்மொழியப்பட்டது.
நகர கழிவுகள் வேகமாகவும் பயனுள்ள வகையிலும் மீற்சுழற்சி செய்ய இம்முறை சிறந்தது. அரச மற்றும் தனியானர் பிரிவுகளின் பங்களிப்புடன் இம்முறை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும். இதனூடாக தரமான சேதன பசளை மற்றும் விலங்குணவு என்பன தயாரிக்க முடியும் என்றும் கலாநிதி ஹேமந்த பிரேமதிலக தெரிவித்தார்.