ஒப்பந்தம் கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
4500 மில்லியன் முதலீட்டினூடாக மேற்கொள்ளப்படவுள்ள இவ்வபிவிருத்தி நடவடிக்கையானது 30 மாதங்களில் நிறைவடையவுள்ளது. குறித்த மருத்துவமனை கட்டிடமானது 7 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், Ideal Medical Product Engineering of France நிறுவனம் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச மற்றும் Ideal Medical Product Engineering of France நிறுவன உப தலைவர் ஒலிவர் மர்சியம் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக ஶ்ரீ சந்திரகுப்த, டி சொய்ஸா வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் ஜயந்த கருணாரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்