28 ஆவது ஆசிய சட்டதரணிகள் சங்கத் தலைவர்களின் மூன்று மாநாடு கடந்த சனிக்கிழமை (22) ஆரம்பமானது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமாகிய இம்மாநாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. ஆசிய பிராந்தியத்தில் சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா ஆகியோர் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.