இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பதுளை லேஜர் தோட்டத்தில் 125 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கமைய இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவ்வடிக்கல் நாட்டும் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் அலுவலகத்தின் ஆலோசகர் டி.சி. மஞ்சுநாத், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், வடிவேல் சுரேஸ், அரவிந்த குமார் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் இணைப்பாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.