மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப இப்பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டப் பணிகளின் நோக்கத்தை நிறைவேற்றல், தகவல் சேகரித்தல், அறிக்கை தயாரித்தல் போன்ற சேவைகளுக்கு இப்பட்டதாரிகள் பயன்படுத்தப்படவுள்ளனர்.
ஒரு வருட பயிற்சி கால அடிப்படையில் இப்பட்டதாரிகளை முகாமைத்துவ சேவை திணைக்களத்தினால் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதுடன் அவர்கள் இதுவரை அடையாளங்காணப்பட்ட வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கரமசிங்க முன்வைத்த குறித்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.