மூன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று (11) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான் குணரத்ன மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி அரச தலைமை சட்ட ஆலோசகர் ஜனக் த சில்வா ஆகியோரே மேன் முறையீட்டு நீதிமன்ற நிதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பிரசன்னமாகியிருந்தார்.