சர்வதேச முதியோர் தின கொடிவாரம் இன்று (11) ஆரம்பமாகிறது.
சர்வதேச முதியோர் தின ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அணிவிக்கப்பட்டது.
இன்று தொடக்கம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு முதியோர் தின கொடி விற்பனையை மேற்கொள்ள தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொடி விற்பனையினூடாக கிடைக்கும் வருமானத்தில் அரைவாசி நிதியினூடாக விற்பனை செய்யும் முதியோர் நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் மிகுதி பணம் முதியோர் பிரதேச அதிகாரக்குழு, தேசிய முதியோர் காரியாலயத்தினால் நடத்தபடும் முதியோர் முதியோர் பாதுகாப்பு நிதியம், என்பவற்றுக்கு வழங்கப்படவுள்ளது என்று சமூக நல மற்றும் மலைய உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.