கதிர்காமம் தெய்வயானை அம்மன் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (09) திறந்துவைக்கப்பட்டது.
கதிர்கால திருவிழா காலத்தில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக நூறு வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டிருந்த அன்னதான மண்டபத்திற்குப் பதிலாக இப்புதிய மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
18 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வன்னதான மண்டபத்தில் ஒரே தடவையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான வசதிகள் உள்ளன.
தெய்வயானை அம்மன் ஆலய நிர்வாக சபை மற்றும் கொடையாளர்கள் பலரின் நன்கொடையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம்மண்டப திறப்பு விழாவில் நிர்வாக சபையின் தலைவர் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், ஏனைய அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டப்ளியு. டி. ஜே. செனவிரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரி வெஹர விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிர் பெற்ற பின்னர் புதிய அன்னதான மண்டபத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.