மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகத்திட்டம் நேற்று (07) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
2200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்நீர் விநியோகத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சு, தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச்சபை ஆகியன இணைந்து நிர்மாணித்துள்ளன.
இத்திட்டத்திற்கான நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தின், மூர் வீதி, உப்புக்குளம் தெற்கு, உப்புக்குளம் வடக்கு, பெரியகடை, பத்தன்கண்டிகோடு கிழக்கு மற்றும் மேற்கு, பெட்டா, எமில் நகர், முருங்கன் ஆகிய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளதுடன் இத்திட்டத்தினூடாக சுமார் 59, 250 பேர் பயனுறுகின்றமை குறிப்பிடத்தக்கது.