சார்க் நாடுகளின் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர்களின் 8 ஆவது சார்க் மாநாடு எதிர்வரும 11ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு, கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இம்மாநாடானது இம்மாதம் 11ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இம்மாநாடாட்டின் தற்போதை பொறுப்பு பாகிஸ்தானிடம் உள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளமை விசேட விடயம் ஆகும்.
அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த மாநாடு, சார்க் அமைப்பின் கோரிக்கைக்கமைய இவ்வருடம் நடத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, இம்முறை மாநாட்டில், சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்தல், நாடுகளுக்கிடையிலான விஸா நடைமுறையில் தளர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் கணனி குற்றச் செயல்களை ஒழித்தல், பொதுமக்களுக்கு விஷ மருந்துகளை தடுத்தல், சிறிய அளவிலானஆயுத விற்பனை சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நிரந்தர தீர்வை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.