தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வொன்று இன்று (07) யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வட மாகாணசபை பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றின் தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கு இச்செயலமர்வு நடத்தப்படுகிறது.
நிதி, ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்தப்படும் இச்செயலமர்வில் வட மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.