அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு தேசிய ரீதியில் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான 23 நிறுவனங்களுடன் 33 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் எதிர்வரும் 11ம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளன.
அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளையும் அமைச்சர் பெற்றுக்கொடுத்தார். ஹொரன, களுத்துறை, கொக்கல மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வுற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் சுமார் 2000 தொழில் வாய்ப்புகள் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், புதிய தொழிற்சாலைகளினூடாக உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2018ம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு தேவையான மருந்துகளில் 75 வீதமானவை உள்நாட்டில் உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.