சுகாதார தகவல்களுக்கான தேசிய கொள்கை நாளை (06) வௌியிடப்படவுள்ளது.
சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
சுகாதார அமைச்சின் தகவல் பிரிவு தலைமையில், அமைச்சின் அனைத்து பிரிவுகளின் அதிகாரிகள், குடித்தொகை மதிப்பீட்டு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பங்களிப்புடன் இச்சுகாதார தகவல்கள் அடங்கிய தேசிய கொள்கையை வௌியிடப்படுகிறது.
சுகாதார தகவல்களுக்கான தேசிய கொள்கையை வௌியிடுவதற்கான அனுமதி இவ்வாண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.