சவுதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் மகிழ்ச்சியை வௌிப்படுத்திய சவுதி இளவரசர், இலங்கையின் வர்த்தகம், உல்லாசத்துறை ஆகிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக பாரிய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்காலத்தில் இலங்கையிலும் முதலீடு செய்யும் வாய்ப்பு தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த சவுதி இளவரசர், இது தொடர்பில் அவர்களை தௌிவுபடுத்துவதற்கு இலங்கை வர்த்தகர் குழாமொன்றை சவுதிக்கு அனுப்புமாறும் ஜனாதிபதியுடன் கோரியுள்ளார்.
நான்கு இலட்சம் இலங்கையர்கள் தற்போது சவுதியில் பணியாற்றுவதாகவும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சவுதி அரசு வழங்கியுள்ள வாய்ப்புக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்போது வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் உடனிருந்தார்