அரச சேவையில் நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு ஜப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பை மேற்கொள்வதற்கான அந்நாட்டு அரச 208 மில்லியன் ரூபா நிதியை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் தமது கல்வி நடவடிக்கையை ஆரம்பிப்பதற்காகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் ஜப்பான் மனித வள அபிவிருத்திக்கான புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் நிதிய புலமைப்பரிசில் திட்டம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய முதலாவது கட்டம் (2010 -2013) இரண்டாம் கட்டம் (2014 -2014) இன் கீழ் 120 பேருக்கு (வருடத்திற்கு 15 பேர்) மேற்படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இவ்வருட இறுதியில் நிறைவுறவுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் குழுவை தெரிவு செய்யும் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. தெரிவுசெய்யப்பட்டவர்களின் கற்றல் நடவடிக்கை உட்பட இதர செலவுக்காக ஜப்பான் அரசு 208 மில்லியன் யென் நிதியை (சுமார் 282 மில்லியன் ரூபா) நிதியை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கமைய குறித்த திட்டத்தை எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு தொடர்ச்சியாக வழங்க ஜப்பான் அரசு இணங்கியுள்ளது. ஜப்பானில் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள 15 புலமைப்பரிசில்களை வழங்குவதற்குப் பதிலாக மூன்றாவது கட்டமான 2017 -2020 காலப்பகுதிக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. கல்விச் செயற்பாட்டை பூர்த்தி செய்த பயனாளிகள் தொழில்ரீதியான அபிவிருத்தியை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு அவசியத்தை ஆராய்ந்தறிந்த பின்னர் வருடத்திற்கு 2 கலாநிதி பட்டப்படிப்பு வாய்ப்புக்களை வழங்கவும் அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் கட்டத்தின் முதலாவது குழுவில் தெரிவு செய்தல் நடவடிக்கையானது 2017 செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இவ்வதிகாரிகளுக்கான வசதிகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக 2018ம் ஆண்டுக்கான ஜப்பான் அரசின் 262 மில்லியன் யென் ( 358 மில்லியன் ரூபா) நிதியை ஜப்பான் அரசு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கு இடையில் பரிமாற்றல் பத்திரம் கையொப்பமிடுதல் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை நிறுவனததுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடம் போன்ற நிகழ்வுகள் கடந்த வாரம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.இலங்கை அரசு சார்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் ஜப்பான் அரசு சார்பில் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச் சுகனும மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் சார்பில் அதன் பிரதான பிரதிநிதி டனக்கா புசாத்தோ ஆகியோர் கையொப்பமிட்டனர்.