மத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 6ம் திகதி காலை 9.00 மணிக்கு கண்டி, பள்ளேகலையில் அமைந்துள்ள மாகாணசபை கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
நியமனங்கள் பெறவுள்ளோரின் பெயர் விபரங்கள் மாகாண கல்வியமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் எம்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டி, கெட்டம்பேயில் அமைந்துள்ள மாகாண தமிழ் கல்வியமைச்சிலும் பல்லேகலை பிரதான அமைச்சிலும் பெயர் விபரங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, உட்பட பல மாகாண சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.